

‘‘மத்திய அரசிடம் தமிழகம் கோரிய நிலுவைத் தொகை கிடைக் கும் என நம்புகிறோம்’’ என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரி வித்தார்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி, உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் க.பொன் முடி பேசுகையில், ‘‘தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசு ரூ. 4 ஆயிரத்து 34 கோடி பல் வேறு திட்டங்களில் நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு சரியான அறிக்கைகளை வழங்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. இந்த தொகையை கேட்டு பெற வேண்டும்’’ என்றார்.
ரூ.17 ஆயிரம் கோடி
இதற்கு நிதியமைச்சர் டி.ஜெயக் குமார் பதிலளிக்கையில்,‘‘ மத்திய அரசு சில திட்டங்களுக்கு 50 சதவீதம், சில திட்டங்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு நிதி வழங்குகிறது. மத்திய அரசு தற்போது ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை தரவேண்டியுள்ளது. முதல்வர் தலைமையில் பிரதமரை சந்தித்த போது கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. அரசு கோரிய தொகையை எந்த நேரத்திலும் மத்திய அரசு விடுவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் பேரவையில் தெரிவித்தார்.