

சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த தீனதயாள் கோடிக்க ணக்கான மதிப்புள்ள விலை உயர்ந்த சிலைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இதற்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.