

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திரு நெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்புகள் (எல்எல்எம் ) உள்ளன. இதில் நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப் பினர் எனில் ரூ.250. அவர்கள் சாதி சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வாங்க விரும்பு வோர் உரிய விண்ணப்பக் கட்டணத்தை “The Director, Directorate of Legal Studies” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்டா கச் செலுத்த வேண்டும்.
வேலூர், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்எம் படிப்பு இல்லை என்ற போதிலும் விண்ணப்ப தாரர்களின் வசதிக்காக அந்த கல்லூரிகளிலும் விண்ணப்பங் கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை ஆக. 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இயக்ககம் அறிவித்துள்ளது.