

‘20 ஆண்டுகளாக போராடி வந்தோம்’ என்று சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு அளித்துள்ளார்.
“நாங்கள் 20 ஆண்டுகளாக போராடி வந்தோம். இந்த நீதிமன்ற அமர்வு வழக்கை முறையாக ஆராய்ந்து விரிவான உத்தரவைப் பிறப்பிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எனக்கு மிகப்பெரிய உற்சாகம் அளித்துள்ளது. எந்தக் கட்சி ஊழல் செய்தாலும் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு அறிவித்துள்ளது.
குறிப்பாக நீதிபதி ராய், ஊழல் என்பது சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் என்று கூறியது எனக்கு நிரம்ப திருப்தி அளிக்கும் கூற்றாகத் தெரிகிறது” என்றார் சுப்பிரமணியன் சுவாமி.