

திருநெல்வேலி பாளையங்கோட் டையில் போலீஸ் வாகனத்தை மறித்து, மிளகாய்ப் பொடி கரை சலை தெளித்து, கைதியை வெட் டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் அருகே உள்ள புல்லா வெளியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் என்ற சிங்காரம்(49). தேவேந்திரகுல வேளாளர் கூட்ட மைப்பு நிறுவனர் பசுபதிபாண்டி யனின் ஆதரவாளர். திருநெல்வேலி யில் ரவுடி மதன் கொலை செய்யப் பட்ட வழக்கு உட்பட தமிழகம் முழுவதும் இவர் மீது 13 கொலை வழக்குகள் உள்ளன. இது தவிர சுபாஷ் பண்ணையார், நெல்லை கோழி அருள் ஆகியோரை கொலை செய்ய முயன்ற வழக்குகளும் இவர் மீது உள்ளன.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து சிங்காரத்தை வழக்கு விசாரணைக்காக தூத்துக் குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நேற்று தங்களின் வாக னத்தில் அழைத்துச் சென்றனர். பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்குவழிச் சாலையில் சென்ற போது, 2 கார்கள் போலீஸாரின் வாகனத்தை வழிமறித்தன. கார் களில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட நபர்கள், அரிவாளால் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்ததுடன், பாட்டிலில் கொண்டுவந்திருந்த மிளகாய்ப் பொடி கரைசலை போலீஸார் மீது வீசினர்.
போலீஸார் நிலைகுலைந்த சந்தர்ப்பத்தில் சிங்காரத்தை வெளியே இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, கார் களில் தப்பினர். உடனே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிங்காரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் திருஞானம், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள் விக்ரமன் (திருநெல் வேலி), அஸ்வின் கோட்னிஸ் (தூத் துக்குடி) உள்ளிட்ட போலீஸ் அதி காரிகள் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடைபெற்ற இச்சம்பவம் திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரிவாள் மற்றும் மிளகாய்ப் பொடி கரைசல் பாட்டிலை போலீ ஸார் கைப்பற்றியுள்ளனர். அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.