தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு: இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

Published on

கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொட ரப்பட்ட வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

ஒரு வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி வழக் கறிஞர்கள் சிலர் கடந்த 2015 ஏப்ரல் 4-ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலின் வீட்டுக்கு சென்றனர். அப்போது தலைமை நீதிபதி டெல்லி சென்றி ருப்பதாக பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கூறியும், வழக்கறிஞர் கள் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டினப் பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர்கள் பலரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத் தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நடந்தது. மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்யக்கோரி கடந்த மே 15-ம் தேதி அகில இந்திய பார் கவுன்சிலுக்கு புகார் அனுப்பியும் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சில தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள்தான் வழக்கறிஞர்களைத் தூண்டி விட்டனர்’’ என்றார்.

2 மாதத்தில் விசாரணை முடிவு

அரசு பிளீடர் எம்.கே.சுப்ர மணியன், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரர் அனுப்பி வைத்துள்ள புகார் குறித்து அகில இந்திய பார் கவுன்சிலும், அதேபோல வழக்கு விசாரணை குறித்த தனது நிலை அறிக்கையை விசாரணை அதிகாரி சீலிடப்பட்ட கவரிலும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in