பாலாற்றில் தடுப்பணை பணிகளை நிறுத்த ஆந்திர முதல்வருடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு துரைமுருகன் வலியுறுத்தல்

பாலாற்றில் தடுப்பணை பணிகளை நிறுத்த ஆந்திர முதல்வருடன் பேச்சு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு துரைமுருகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

பாலாற்றில் தடுப்பணை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

வாணியம்பாடி அடுத்த புல்லூர் பாலாற்றுப் பகுதியில் தடுப் பணையை ஆந்திர அரசு உயர்த் திக் கட்டியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்து, போராட்டங் களை நடத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத் துக்கு நீர்வரத்து கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டதால், மனமுடைந்த திம்மாம்பேட்டை பள்ளத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர், புல்லூர் தடுப்பணை யில் குதித்துத் தற்கொலை செய் துகொண்டார்.

இந்நிலையில், துரைமுருகன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் காந்தி (ரா ணிப்பேட்டை), கார்த்திகேயன் (வேலூர்), நந்தகுமார் (அணைக் கட்டு), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகி யோர் நேற்று புல்லூர் தடுப் பணையை பார்வையிட்டனர்.

பின்னர் துரைமுருகன் செய் தி யாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு ஏமாந்து போனதால் தான் புல்லூர் தடுப்பணை உயர்த் திக் கட்டப்பட்டுள்ளது. மேலும், கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணியை நிறுத்த கடிதம் எழுதி னால் மட்டும் போதாது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வர 7 முதல் 8 ஆண்டுகளாகும். அதற்குள், பாலாற்றில் அனைத்துத் தடுப்ப ணை களையும் ஆந்திர அரசு கட்டி முடித்துவிடும்.

தமிழக அமைச் சர்கள் ஆந்திர முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத் தத் தயங்கினால், திமுக உறுப் பினர்களாகிய நாங்கள் உடன் செல்ல தயாராக இருக்கிறோம். ஒரு விவசாயி மரணத்தை வேலூர் மாவட்ட நிர்வாகம் இழிவுபடுத்தி உள்ளது” என்றார்.

இதையடுத்து, திம்மாம்பேட்டை அடுத்த பள்ளத்தூர் கிராமத்துக்குச் சென்ற துரைமுருகன் மற்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பி னர்கள் சீனிவாசன் குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in