

ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்து வதற்கான கவுன்ட் டவுன் இன்று மாலை தொடங்குகிறது.
உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட், ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் நாளை (5-ம் தேதி) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 4 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இந்த வகை ராக்கெட்டை இஸ்ரோ முதல்முறையாக ஏவுகிறது. இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராக்கெட்டை செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராக்கெட் புறப்படுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்குகிறது. கவுன்ட் டவுன் முடிந்ததும், நாளை மாலை 5.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.