

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அறிந்து தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தீக்குளித்து, தூக்கிட்டு, விஷமருந்தி, பஸ், ரயில் முன்பு பாய்ந்து, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அதிர்ச்சியில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு இதுவரை 62 பேர் உயிரிழந்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.