

வார்தா புயல் பாதிப்பால் இந்தாண்டு சென்னையில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இந்திய சுற்றுலா மற்றும்தொழில் பொருட்காட்சி நடத்தப்படும். பொங்கலை கருத் தில் கொண்டு நடத்தப்படும் இப்பொருட்காட்சியை ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்கள் கண்டு மகிழ்வர். இதில், பல்வேறு துறைகளின் அரங்குகள், கேளிக்கை, விளையாட்டு அரங்கு கள் அமைக்கப்படும். கடந்த 2015ல் 42- வது தொழில் மற்றும் சுற்றுலா பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் டிசம்பர் மாதம் செய்யப்பட்டிருந்த நிலையில், கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், டிசம்பர் மாதத்துக்குப் பதில் ஜனவரி 20-ம் தேதி பொருட்காட்சி தொடங்கப்பட்டது. 70 நாட்கள் பொருட்காட்சி நடத்தப் பட்டது. அதேபோல், கடந்தாண்டி லும், டிசம்பர் 3 வது வாரத்தில் 43-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்க ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலை யில்,வார்தா புயல் ஏற்பட்டதால் அரங்குகள் அமைக்கும் பணி தடைபட்டது. தற்போது பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக சுற்றுலாத் துறையினர் கூறுகையில்,‘‘ புய லால் பணிகள் பாதிக்கப்பட்டன. கடந்தாண்டைப்போல் இந்தாண் டும் ஜனவரி இறுதியில் பொருட் காட்சி தொடங்கும் வகையில் பணிகள் விரைவாக நடந்து வரு கின்றன’’ என்றனர்.