

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினருக்கு பெரிய நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் சதவாகனா ஹார்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவைப்படும் ஊழி யர்களைத் தேர்வுசெய்ய இருக் கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் www.drgindia.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும், முகாம் நடைபெறும் இடத்திலும் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்கள் அறிய 0891-2813067, 2812748 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.