சர்க்கரை மானியம்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சர்க்கரை மானியம்: ஜி.கே.வாசன் கோரிக்கை
Updated on
1 min read

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நியாய விலை கடைகளில் மானியத்துடன் விற்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரி விக்கின்றன.

நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50-க்கு மானிய விலையில் விற்கப்படுகி றது. இந்த ஒரு கிலோ சர்க் கரைக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.18.50-யை மானியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் சரியாக வரை யறுக்கப்படாத நிலையில், இத் திட்டத்தை தொடர்வது சரியாக இருக்காது என்று கருதி மத்திய அரசு இந்த திடீர் முடிவு எடுத்துள்ளது. இது முற்றிலும் ஏற்புடையதல்ல.

மேலும், தமிழக அரசு மத்திய அரசை தொடர்புகொண்டு நியாய விலை கடைகளில் மானியத்துடன் கூடிய சர்க்கரையை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in