திருப்பூர் தனியார் பள்ளியில் நடந்த சம்பவம்: சிறுவன் கொலை வழக்கில் அரசு தரப்பில் 10 பேர் சாட்சியம் - விசாரணை ஆக. 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருப்பூர் தனியார் பள்ளியில் நடந்த சம்பவம்: சிறுவன் கொலை வழக்கில் அரசு தரப்பில் 10 பேர் சாட்சியம் - விசாரணை ஆக. 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் கொலையான வழக்கில், அரசு தரப்பில் நேற்று 10 பேர் சாட்சியம் அளித்தனர்.

திருப்பூர் கேவிஆர் நகரில் உள்ள கதிரவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பில் படித்து வந்தவர் ஸ்ரீ சிவராம். இதே பள்ளியில் பயிலும் 6- ம் வகுப்பு மாணவர் ஒருவர், ஸ்ரீ சிவராமை கல்லால் அடித்ததால் உயிரிழந்ததாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் சிறுவர் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி செல்லதுரை, 10 சாட்சியங்களிடம் நேற்று விசாரணை மேற்கொண்டார்.

அரசு தரப்பு சாட்சிகளான கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நாராயணன், பள்ளி ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, சுந்தரி, பெரியகருப்பன், நிஷாந்தி, அண்ணாதுரை, பள்ளிக் காவலர் ரங்கராஜ், வேன் ஓட்டுநர் செல்வராஜ், வேன் மேலாளர் வெங்கடாசலம் மற்றும் வெங்கடேசன் ஆகிய 10 பேரிடம் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஆக. 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அரசு உதவி குற்றத்துறை வழக்கறிஞர் கவிதா வழக்கில் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in