Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

பாஜக அல்லது காங்கிரசுடன் சேர்ந்தாலும் அதிமுகவுடன்தான் கூட்டணியா?- மார்க்சிஸ்ட் கட்சிக்கு கருணாநிதி கேள்வி

பா.ஜ.க., அல்லது காங்கிரசுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களோடுதான் இருக்குமா என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வியாழனன்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க.,வுடன் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ளாது என்று சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி கொள்வதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காத காரணத்தால்தான், நான் பொதுக் குழுவில் அவர்களைப் பற்றி பேசவில்லை.

அவர்களுக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைவிட, மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்தைப் பெறுவது முக்கியம். அவர்கள் முன்பு மாநிலங்க ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட தி.மு.க. தேவைப்பட்டது. அதனால், அப்போது தி.மு.க.வோடு கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைத்துக் கொண்டார்கள் போலும். எப்படிப்பட்ட கட்சி, இப்போது எப்படி ஆகிவிட்டது?

அ.தி.மு.க.வோடு சேர்ந்து, நாடு தழுவிய அளவில் மத சார்பற்ற கட்சிகளை இணைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது என்று ராமகிருஷ்ணன் கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான சேது சமுத்திரத் திட்டம் கூடவே கூடாதென்று அ.தி.மு.க. உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வருகிறதே, அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடந்தையான செயல்பாடுதானா?

ஊழல் குற்றச்சாட்டுகளில் தி.மு.க.வுக்கு பங்கு உள்ளது என்று ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே, அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டதா? வழக்கு விசாரணையிலேதான் இருக்கிறது. அப்படியென்றால், சொத்துக் குவிப்பு ஊழல், டான்சி நில ஊழல், கொடைக்கானல் ஓட்டல் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், ஸ்பிக் பங்கு ஊழல், ஆம்னி பஸ் வரி குறைப்பு ஊழல் என்ற நீண்ட பட்டியலுக்கு உரியவர் யார்?

சிறுதாவூரில் தலித் மக்க ளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, ஜெயலலிதா குழுவினர் ஆக்கிர மித்துக் கொண்டதாக முதல்வராக இருந்த என்னிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் புகார் கொடுத்து, நானும் அதனை உடனடியாக ஏற்று சிவசுப்ரமணியம் கமிஷன் நியமிக்கப்பட்டதே, அந்த ஊழல் எல்லாம் அந்தக் கட்சிக்கு, ராம கிருஷ்ணன் பொறுப்பாளராக ஆகிவிட்டதால் வசதியாக மறந்து விட்டதா?

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத அணியை தி.மு.க. அமைத்தாலும் ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியுடனோ, பா.ஜ.க.வுடனோ அ.தி.மு.க., கூட்டணி வைத்துக் கொள்ளுமேயானால், அப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களோடுதான் இருக்குமா?

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்காக, சாலையோரங்க ளில் கம்புகளை நட்டு, அதில் “அம்மா”, “அம்மா” என்று பெரிய பலகைகளைக் கட்டி பாதைகளை யெல்லாம் மறைப்பார்கள் என்று நான் பேசியிருந்தேன். அதை மெய்யாக்கும் வகையில் ‘நடை பாதையில் முளைத்த கட்-அவுட்கள் : முட்டி மோதி காயம் அடைந்த பார்வையற்றோர்’ என்ற தலைப்பில் மிகப் பெரிதான செய்தி ‘தி இந்து’ நாளேட்டில் 18ம் தேதி வெளியாகியுள்ளது.

அதில், ‘அண்ணா மேம்பாலச் சந்திப்பு அருகே நடைபாதையில் திடீரென்று முளைத்த கட்-அவுட்களால் பார்வையிழந்தோர் தடுக்கி விழுந்து காயமடைந்தனர். சென்னையின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை மறித்து பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x