சைதாப்பேட்டை தொகுதியில் கோயில் குளம் தூர்வாரும் பணி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சைதாப்பேட்டை தொகுதியில் கோயில் குளம் தூர்வாரும் பணி: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயில் குளம் குப்பைகள் நிறைந்து, சிதிலமடைந்து காணப் பட்டது. இந்தக் குளத்தை பொதுமக்கள், தொண்டு நிறு வனங்களுடன் இணைந்து தூர் வாருவதற்கு தொகுதி எம்எல்ஏ வான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில் திமுகவினருடன் இணைந்து தன்னார்வ தொண்டு அமைப்பினர், இளைஞர்கள், பொதுமக்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பணியாற்றினர்.

இதுபற்றி எம்எல்ஏ மா.சுப்பிர மணியன் கூறும்போது, ‘‘மொத்தம் 7 நாட்கள் இங்கு பணிகள் மேற் கொள்ளப்படுளம். 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் குளத்தின் உட்பகுதியில் புல், குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டு 4 அடிக்கு ஆழம் தோண்டப்படும். மொத்தம் 1,500 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் காலங்களில் இந்தக் குளத்தில் முழுமையாக நீர் தேங்கும் அளவுக்கு தயார்படுத்த உள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in