சென்னை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு 232 பேர் நியமனம்: 95 சதவீதம் பணிகள் நிறைவு

சென்னை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு 232 பேர் நியமனம்: 95 சதவீதம் பணிகள் நிறைவு
Updated on
1 min read

சென்னை அண்ணா சாலை புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றும் பணிகள் 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. 232 ஊழியர் கள் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்தை , டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக (பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை) மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.26.92 கோடி செலவில் நடந்த பணியில் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு 500 படுக்கைகள், 20 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள், 200 கழிப்பறைகள், பரிசோதனை கூடங்கள், நூலகம் மற்றும் நோயாளிகளை ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேர்களில் அழைத்து செல்ல சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 100-க்கும் மேற்பட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக மாற்றும் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் இதயம், இதய அறுவைச் சிகிச்சை, நரம்பியல் துறை, சிறுநீரகதுறை, மயக்கவியல் துறை, ரத்தநாள துறை என மொத்தம் 9 சிறப்பு துறைகள் செயல்பட உள்ளது.,

மருத்துவமனைக்கு என தனியாக அனுபவம் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக 150 நர்ஸ்கள் மற்றும் மருந்தாளுநர், லேப்டெக்னீசியன் உட்பட பணியாளர்கள் 82 பேர் என மொத்தம் 232 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கவுன்சலிங்

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் (டிஎம்இ) திங்கள்கிழமை நடக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார்

16 ஆயிரம் நர்ஸ்கள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள், லேப்டெக்னீசியன்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின் றனர். இவர்கள் அனைவருக்கும் கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்கான கடிதம் டிஎம்இ, டிஎம்எஸ், டிபிஎச் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விருப்ப முள்ளவர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம். இதே போல டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் காலியாகும் நர்ஸ்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in