

கர்னாடக இசைக் கலைஞர்கள் பங்குபெறும் ‘நாள் முழுவதும் நல்லிசை’ என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை பொதிகை தொலைக் காட்சி நிலையமும், சென்னை தியாக பிரம்ம கான சபாவும் இணைந்து வழங்குகின்றன.
திநகர் - வாணி மஹாலில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த இசை நிகழ்ச்சி இரவு 9 மணி வரை நடக்கிறது. இதில், ஆலங்குடி பக்கிரிசாமி குழுவினரின் நாதஸ்வரம், மகாநதி ஷோபனாவின் வாய்ப்பாட்டு, கணேஷ் குழுவினரின் சித்ரவீணை, ஜெயந்த் குழுவினரின் புல்லாங்குழல், திருமருகல் கணேஷ் குழுவினரின் இரு வயலின், திருச்சூர் சகோதரர்களின் வாய்ப்பாட்டு, ஷிவமோகா குமாரசாமி குழுவினரின் சாக்ஸஃபோன், வி.சங்கர நாராயணன் குழுவினரின் வாய்ப்பாட்டு, அக்கரை சகோதரிகள் குழு வினரின் இருவயலின், டி.கே.ராமசந்திரன் ஐஏஎஸ் குழுவினரின் வாய்ப்பாட்டு, கன்யாகுமாரியின் வயலின், ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் ஸ்வரலயம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மாலை நடைபெறும் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள்.