நாளை வரைவுப் பட்டியல் வெளியாகிறது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் - அரசியல் கட்சியினருடன் பிரவீண்குமார் ஆலோசனை

நாளை வரைவுப் பட்டியல் வெளியாகிறது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் - அரசியல் கட்சியினருடன் பிரவீண்குமார் ஆலோசனை
Updated on
1 min read

தமிழகத்தில் நாளை முதல் சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை கோட்டையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர் பாக தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை உள்ளடக்கிய சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல் நடை பெறவுள்ளன. முடிவில், ஜனவரி 5 ந்தேதி இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு எல்லா வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.

இந்நிலையில் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இது தொடர் பாக நேற்று ஆலோசனை நடத்தி னார்.

அதில், பொள்ளாச்சி ஜெய ராமன் (அதிமுக), கிரிராஜன் (திமுக), ராகவன் (பாஜக), சக்தி வடிவேல் (காங்கிரஸ்), பார்த்த சாரதி எம்.எல்.ஏ. (தேமுதிக), ரமணி, ஆறுமுக நயினார் (மார்க் சிஸ்ட்), செந்தில்குமார், மகேந்திர பாண்டியன் (தேசியவாத காங்கிரஸ்) உள்பட 7 அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

கிரிராஜன் (திமுக):

வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, அது பற்றிய விவரங்களை பூத் அளவில் ஏஜெண்டுகளிடம் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் எப்போது நடத்தப் படும் என்று கேட்டோம். அதற்கு, தொகுதி காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலாளரிடம் இருந்து அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பார்த்தசாரதி (தேமுதிக): வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உரிய ஆவணம் இல்லா தோர் ஊராட்சித் தலைவர்களின் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொடுத்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், அதில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன என நாங்கள் தெரிவித்ததும், அதை பிரவீண் குமார் ஏற்றுக்கொண்டார். அனைத்து அரசு அலுவலகங் களிலும் ஜெயலலிதா படம் இருப்பதை அகற்ற வேண்டும் என்றும் கூறி இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்த கூட்டத்தில் இணை தேர்தல் ஆணையர்கள் சிவஞானம், சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in