Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

சபரிமலை சீசனுக்காக 90 சிறப்பு ரயில்கள் - இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது

சபரிமலை சீசனில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில்90 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சூப்பர்பாஸ்ட் வாராந்திர சிறப்பு ரயில் (கோவை வழியாக) (06001) திங்கள்தோறும் நவம்பர் 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06002), செவ்வாய்தோறும் நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்துசேரும்.

நாகர்கோவில் - சென்னை எழும்பூர்

நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் வாராந்திர சிறப்பு ரயில் (06310) செவ்வாய்தோறும் (நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (06309) சென்னை சென்ட்ரல், கோவை, திருவனந்தபுரம் வழியாக நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) சென்னை எழும்பூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு நாகர்கோவில் போய்ச்சேரும்.

கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல்

கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06316) வெள்ளிதோறும் நவம்பர் 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்துசேரும்.

சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சூப்பர்பாஸ்ட் வாராந்திர சிறப்பு ரயில் (06315) சனிக்கிழமைகளில் நவம்பர் 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு கொச்சுவேலி போய்ச்சேரும்.

கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06318) திங்கள்தோறும் நவம்பர் 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 1.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்துசேரும்.

சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (06317) செவ்வாய்தோறும் நவம்பர் 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 14, 21 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு கொச்சுவேலி போய்ச்சேரும்.

கொச்சுவேலி - மங்களூர்

கொச்சுவேலி - மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் (06304) நவம்பர் 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூர் போய்ச்சேரும்.

மங்களூர் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (06303) நவம்பர் 28, டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் வியாழன்தோறும் மங்களூரில் இருந்து பகல் 12.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு கொச்சுவேலி போய்ச்சேரும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x