சசிகலாவை ‘சின்னம்மா’ என அழைப்பதில் தவறில்லை: முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்

சசிகலாவை ‘சின்னம்மா’ என அழைப்பதில் தவறில்லை: முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்
Updated on
1 min read

அமைச்சர்களும், அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது கட்சியின் பொதுச்செயலாளரை ‘சின்னம்மா’ என்று அழைப்பதில் தவறில்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் எஸ்.செல்வ மோகன் தாஸ் (தென்காசி) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கூட் டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ‘வீர மங்கை சின்னம்மா’ என அதிமுக பொதுச்செய லாளர் சசிகலாவைப் புகழ்ந்து பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசுவதைப் புரிந்துகொள்ள முடி கிறது. பேரவையில் இல்லாத ஒருவரைப் புகழ்ந்து பேசுவது சரிதானா?

பேரவைத் தலைவர் பி.தனபால்:

அமைச்சர்களும், அதிமுக உறுப் பினர்களும் அவர்களது கட்சியின் பொதுச்செயலாளரை ‘சின்னம்மா’ என்று அழைக்கின்றனர். அதில் தவறு எதுவும் இல்லை. திமுக உறுப்பினர்களும் அவையில் இல்லாத தங்களது தலைவர்களைப் புகழ்ந்து பேசுகின்றனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை மரியாதையாக அழைப் பதில் தவறில்லை. கடந்த காலங் களில் திமுக உறுப்பினர்கள் அவை யில் இல்லாத தலைவர்களைப் புகழ்ந்து பேசியுள்ளனர். இவை யெல்லாம் பேரவைக் குறிப்பில் பதிவாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:

நாங்கள் முன்பு தவறு செய்திருந்தால், அதே தவறை நீங்களும் செய்ய வேண்டுமா என்பதே என் கேள்வி. மக்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரவைத் தலைவர்:

உறுப்பினர் கள் அவரவர் கட்சித் தலைவர்களை பாராட்டிப் பேசுவதில் தவறில்லை.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in