ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் அறிவியல் போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லும் வாய்ப்பு

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் அறிவியல் போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லும் வாய்ப்பு
Updated on
1 min read

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாண வர்களுக்காக தேசிய அளவிலான அறிவியல் போட்டியை நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி விருது’ வழங்கி வருகிறது. இதன் தொடர்ச் சியாக இந்தாண்டும் போட்டிகளை நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி கேசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

இந்தாண்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாண வர்கள் இணையதளம் வாயிலாக வரும் 24-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறுவோர் ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள காக்ரின் காஸ்மோநெட் மையத் துக்கு அழைத்து செல்லப் படுவார்கள். இந்த முறை நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூல் செய்வதில்லை. விஞ்ஞானிகளை உருவாக்குவதே நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் அறிவியல் போட்டி குறித்த சுவரொட்டியை ரஷிய துணை தூதரும் சென்னையில் உள்ள ரஷிய அறிவியல் மற்றும் கலாச்சார மைய இயக்குநருமான மிகைல் கார்படோவ் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:

இந்திய ரஷிய நட்பு 70 ஆண்டுகளை எட்டியுள்ளது. இரு நாடுகளும் அறிவியல் ரீதியில் பல ஒத்துழைப்புகளை செய்து கொண்டுள்ளன. மின் சாரம், விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, ராணுவ ஆராய்ச்சி போன்ற பலவற்றில் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in