

செங்கல்பட்டு அடுத்த மாமண் டூரில் அரசு போக்குவரத்து கழகத் துக்கு சொந்தமான உணவகத்துடன் கூடிய பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. நெடுந் தூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகள் இங்கு சுமார் 20 நிமிடம் நிற்கும். இந்த வளாகத்தில் உள்ள கடைகளில் ரூ.10 நாணயத்தை வியாபாரிகள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு சில கடைகளில் ரூ.10 நாணயம் வாங்கப்படாது என அறிவிப்பு போர்டும் வைக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி இருமுறை அறிவிப்பு செய்தும் கடைக்காரர்கள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘கடைக்காரர்கள் ரூ.10 நாண யத்தை வாங்கும்படி அறிவுறுத்தி யுள்ளோம், தொடர்ந்து மீறும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ என்றார்.