

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுடன், நிர்வாகம் மற்றும் அரசு நடத்திய 19-வது கட்ட பேச்சுவார்த்தையில் தினக்கூலியை உயர்த்தி வழங்க நிர்வாகம் உறுதி அளித்ததையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் ஆனது.
சென்னை சாஸ்திரி பவனில் நேற்று பகல் 12.30 மணிக்கு பேச்சு வார்த்தை தொடங்கியது. நிர்வாக தரப்பில் தலைமை பொது மேலாளர் முத்து, பொது மேலாளர் பாலாஜி, முதன்மை மேலாளர் சவுந்தரராஜன் மற்றும் அரசு தரப்பில் சென்னை மண்டல துணை தொழிலாளர் நல ஆணையர் கந்தசாமி, புதுவை தொழிலாளர் உதவி ஆணையர் சிவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியு, பாமக உள் ளிட்ட 10 தொழிற்சங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை பிற்பகல் 2.30 மணி அளவில் நிர் வாகம் தொடங்கியது. இரவு 9 மணி அளவில் ஒப்பந்தத் தொழி லாளர்களின் தினக்கூலியை நாள் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.480 ஆக உயர்த்த நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.