

விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்றாவிட்டால் வரும் மே 25-ம் தேதி டெல்லி சென்று மீண்டும் தொடர் போராட்டத்தை நடத்துவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 23-ம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து மே 25-ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு அறிவித்தார். பின்னர், நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியிலி ருந்து விவசாயிகள் ரயிலில் புறப் பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று காலை 7.20 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அங்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியினர், எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் மாதவன், விவசாய சங்கங்களின் கூட்டிய தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், டெல்லியில் போராடி வந்த எங்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு அளித் தனர். அதனால்தான் மத்திய அரசு 15 நாட்களில் நல்ல முடிவை அறிவிக்க உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணனும் உறுதிமொழி அளித்துள் ளார். தமிழக முதல்வர் பழனி சாமியும் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, எங்கள் போராட் டத்தை ஒத்திவைத்துள்ளோம். எங்களின் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும் என நம்பு கிறோம். அப்படி கிடைக்காவிட் டால் வரும் மே 25-ம் தேதி டெல்லி சென்று மீண்டும் தொடர் போராட்டத்தை நடத்துவோம்.
போராட்டத்தின்போது எங் களுக்கு மிரட்டல்கள் வந்தன. மேலும், என்னை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். எனக்கு ஆடி கார் உள்ளது என்றும், 100 ஏக்கர் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். எனக்கு 20 ஏக்கர் நிலம்தான் உள்ளது. இதற்குமேல் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.