தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கிய திலிருந்து, தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது.
நிலப் பகுதியில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலையால், மாநிலத் தின் பல பகுதிகளில் வானம் பொதுவான மேக மூட்டத்துடன் காணப்படுவதால், பல நகரங் களில் வெப்ப நிலையும் குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 24 மணி நேரத் தில் வெப்பச் சலனம் காரண மாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நிலப்பகுதியில் நிலவும் காற் றழுத்த தாழ்வுநிலையால், ஆங் காங்கே திடீர் மேகக் கூட்டங்கள் உருவாகி, மழைதர வாய்ப்புள்ளது. மேகக் கூட்டங் களால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் குறையும்.
செஞ்சியில் 5 செமீ
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, செஞ்சியில் 5 செமீ, கள்ளக்குறிச்சியில் 4 செமீ, பண்ருட்டி, செங்கம், வாழப்பாடி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலத்தில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின் படி, அதிகபட்சமாக திருச்சியில் 102.2, மதுரையில் 101.84, சென்னை யில் 100.94, பாளையங் கோட்டை, திருத்தணியில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறி னார்.
