

ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர மறுத்ததால் பொதுமக்கள் திடீரென முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறி விப்பை கடந்த நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு களை வங்கியில் சென்று மாற்றிவந்தனர். இவ்வாறு மாற்றுவதற்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி இறுதி நாளாக அறி விக்கப்பட்டது.
அதன் பிறகு ரிசர்வ் வங்கியில்தான் மாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, ரிசர்வ் வங்கியில் நேற்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்காக ஏராளமானோர் திரண்டனர். இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் ரிசர்வ் வங்கியை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பாக கூறியதை யடுத்து மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.