சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது - 26-வது முறையாக சம்பவம்

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது - 26-வது முறையாக சம்பவம்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் 26-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்து திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் கண்ணாடி, கிரானைட் கற்கள் உடைந்து விழுவது தொடர்கதையாக உள்ளது.

இதுவரை விமான நிலையத்தில் 25 முறை கண்ணாடிகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுந்துள்ளன. இந்நிலையில்,26–வது முறையாக பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள கழிவறையில் இருந்த கண்ணாடி நேற்று அதிகாலை உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல்அறிந்து வந்த விமான நிலைய ஊழியர்கள், உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in