

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் தூத்துக்குடி மாநகர மக்கள் தொட்டிகளில் குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: தூத்துக் குடி மாநகராட்சி பகுதியில் பரவலாக டெங்கு காய்ச்சல் உள்ளது. சராசரி யாக 80 முதல் 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை. அனைவரும் குணமடையும் நிலையில் இருக்கின்றனர்.
டெங்கு பரவ காரணம்
பாதுகாப்பற்ற நிலையில் குடிநீரை நீண்ட நாள் சேமித்து வைப்பதே டெங்கு காய்ச்சல் பரவக் காரணம். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது தினமும் 24 முதல் 25 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இங்குள்ள 4 லட்சம் மக்களுக்கு தினமும் 60 லிட்டர் குடிநீர் வழங்க முடியும்.ஆனால், மக்கள் தண்ணீரை அதிகளவில் பிடித்து பாதுகாப்பாற்ற முறையில் தொட்டிகளில் சேமித்து வைக்கின் றனர். மறுமுறை தண்ணீர் வந்த தும், ஏற்கெனவே பிடித்ததைக் கொட்டிவிட்டு புதிதாக சேமிக் கின்றனர். இதன் மூலம் டெங்கு கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தி யாகின்றன. மேலும், டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு அளிப்ப தில்லை. இருப்பினும், வீடு களுக்கு உள்ளேயும், வெளியே யும் புகை மருந்து அடிக்க உத்தர விடப்பட்டுள்ளது.
கம்பூச்சியா மீன் குஞ்சுகள்
மாநகராட்சி பகுதியில் பராமரிப் பற்ற மற்றும் கைவிடப்பட்ட நிலை யில் 2,000 கிணறுகள் உள்ளன. இவற்றில், 60 ஆயிரம் கம்பூச்சியா மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. மேலும், இங்கேயே ஒரு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கீழ்நிலைத் தொட்டிகளில் குடிநீரை சேமிப்பதை நிறுத்த வேண்டும். கோவில்பட்டியில் வீடுகளில் 18 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண், செல்பேசி எண் 100 சதவீதம் இணைக்கப்பட்டு விட்டது. ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்.
மாவட்டத்தில் 4,51,796 குடும்ப அட்டைகளுக்கு துவரம் பருப்பு தலா 1 கிலோ, பாமாயில் 1 லிட்டர் வீதம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் இவை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கருணை அடிப்படையில் 3 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.வீரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராசையா, மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.