சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி: பிளஸ் 2 தேறிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி: பிளஸ் 2 தேறிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னையில் சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற பிளஸ் 2 தேறிய பெண்கள் விண்ணப் பிக்கலாம்.

தற்போது பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆகவே, நீட் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை என மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.

மேலும், தொழில் கல்விகளில் சேரவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், செவிலியர் உதவி யாளர் பயிற்சியில் சேர மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, உயர்கல்வி பயில வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளும், மருத்துவத் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களும் இந்தப் பயிற்சியை தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்நிலையில், ஜூலியன் பவுன்டேசன் அறக்கட்டளை, பாரத் சேவா சங்கம், தேசிய வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து செவிலியர் உதவியாளர் பயிற்சித் திட்டத்தை சென்னையில் செயல்படுத்தி வருகின்றன.

பெரம்பூர் ஜூலியன் மருத்துவமனை வளாகத்தில் செய்முறையுடன் கூடிய பயிற்சியாக இந்த செவிலியர் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகி ஆல்வின் கூறும்போது, ’‘பிளஸ் 2 தேர்வில் தேறிய மாணவிகள் இந்த பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கு திருமணமாகி இருக்கக் கூடாது. வயது 18 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 2 ஆண்டுகளாகும்.

பயிற்சிக்கு தேர்வாகும் மாணவி களுக்கு சேர்க்கை கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு, சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்’’ என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை -பெரம்பூர் ரயில் நிலையம் அருகில், ஜமாலியாவில் உள்ள ஜூலியன் மருத்துவமனையை நேரிலோ அல்லது 9444296607 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in