விமானப்படை பயிற்சி நிறைவு

விமானப்படை பயிற்சி நிறைவு
Updated on
1 min read

தாம்பரம் விமானப் படை நிலையத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஏர் கமோடர் பவன் முல்லிக், “ விமானப் படை வீரர்கள் தொழில் முறையில் சிறந்து விளங்க வேண்டும். இன்றைய விமானப் படை பயிற்சி வகுப்புகள் மற்றும் விமானங் களில் இருந்து ஆயுதத் தாக்குதல் முறையில் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் விமானப் படை வீரர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும்” என்றார்.

ஏரோபிக்ஸ், யோகா, இசை கருவிகள் வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகளைச் செய்து காண்பித்தனர். பயிற்சி காலத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்ட சரப்ஜித் சிங்குக்கு பரிசு கோப்பையினை ஏர் கமோடர் பவன் முல்லி வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in