Published : 22 Jun 2017 08:53 AM
Last Updated : 22 Jun 2017 08:53 AM

கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்: 30 நாட்களில் அனுமதி கிடைக்காவிட்டால் கட்டிட பணியை உடனடியாக தொடங்கலாம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கட்டிட வரைபட அனுமதிக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும். 30 நாட்களில் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி அளிக்காவிட்டால் கட்டிடப் பணி களை தொடங்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கைகள் மீது 2 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய போது அமைச்சர் எஸ்.பி.வேலு மணி 66 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட அளவுக்குமேல் கட்டிடம் கட்ட வீட்டுவசதித் துறையிடம் திட்ட அனு மதியும் உள்ளாட்சித் துறையிடம் கட்டிட அனுமதியும் பெற வேண் டும். இதில் பொதுமக்களுக்கு பல் வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசிடம் கடனுதவி பெறு வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, உரிய சட்டத் திருத்தங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் அதிகரிக் கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளால் குடியிருப்பு கட்டிடங்களுக்கு தற்போது 4 ஆயிரம் சதுர அடி வரை யிலான திட்ட அனுமதி அளிக்க அதிகாரம் உள்ளது. இதை கூடுத லாக உயர்த்தி வழங்க உள்ளாட்சி களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப் படும். வணிக கட்டிடங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடி வரை திட்ட அனுமதி வழங்கும் தற்போதுள்ள அதிகாரத்தை கூடுதலாக உயர்த்தி, வணிக, பொது, சிறப்பு கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

தற்போது 8 மனைகள் வரை மனை உட்பிரிவு அனுமதி வழங்க சிஎம்டிஏ எல்லைக்குட்பட்ட பகுதி களில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல மற்ற நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

கட்டிட வரைபட அனுமதிக்கு இனி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்ப மனு அளிக்கப் பட்ட 30 நாட்களுக்குள் உள் ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தால், அனுமதி அளித்ததாக கருதி விதிகளுக்கு உட்பட்டு நில உரிமையாளர் மற்றும் கட்டுனர் கள் பணிகளை தொடங்க அனுமதிக் கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.75 கோடியே 51 லட்சத்தில் 25 நகரங்களில் 153 பசுமை பூங்காக் கள் அமைக்கப்படும். ஆம்பூரில் ரூ.205 கோடியிலும் திண்டிவனத் தில் ரூ.230 கோடியிலும் செங்கல்பட்டில் ரூ.125 கோடியிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். தகுதியான ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் 2-ம் நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த் தப்படும்.

ஊரக வளர்ச்சித் துறை

ஊரகப் பகுதிகளில் வாய்க்கால், ஓடைகள், கால்வாய்கள் குறுக்கே ரூ.250 கோடியில் 20 ஆயிரம் தடுப்பணைகள் இந்த ஆண்டு கட்டப்படும். ஊரக பகுதிகளில் ரூ.200 கோடியில் பாதரச ஆவி, சோடியம் ஆவி, குழல் தெரு விளக்குகள் எல்லாம் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 9,350 நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். 40 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு தலா 2 நொச்சிச் செடிகள் இலவசமாக வழங்கப்படும். ஆயிரம் நகர்ப்புற இளம் பெண்களுக்கு சமையலறை மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுதுபார்த்தல் பயிற்சி அளித்து மகளிர் சேவை மையங்கள் உருவாக்கப்படும்.

சென்னை மாநகராட்சி

சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் ரூ.20 கோடியில் பாதசாரிகள் வளாகம் அமைக் கப்படும். தியாகராயா சாலை - தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ.36 கோடியே 50 லட்சத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி கட்டிடங்களின் மேற் கூரையில் ரூ.39 கோடியில் சூரிய மின்உற்பத்தி தகடுகள் அமைக்கப்படும்.

சென்னை மாநகராட்சி நிதியின் மூலம் மாநகரப் பேருந்து போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம், குடிநீர், கழிவுநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரியை விரைவாக செலுத்த மக்கள் பயன்பாட்டுக்கு ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்படும். மாநகர விரிவாக்கப் பகுதிகளில் கழிவுநீர் அகற்ற குறைந்த கட்டணத்தில் கழிவுநீர் ஊர்தி கள் ஏற்பாடு செய்யப்படும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.226 கோடியில் புனரமைக்கப் படும்.

இவ்வாறு அமைச்சர் அறி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x