‘தி இந்து’ - எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா: திருவள்ளூரில் நாளை நடக்கிறது

‘தி இந்து’ - எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ விழா: திருவள்ளூரில் நாளை நடக்கிறது
Updated on
1 min read

பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ மூங்கிலான் உடையார் திருமண மஹாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.

பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதியுடன் 3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விவசாயி கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் மேம்பாட்டுக்காக நாளிதழ் வழியாக மட்டுமின்றி, நேரடியாக கள அளவிலும் பல நிகழ்ச்சிகளை ‘தி இந்து’ நாளிதழ் நடத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்க ளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சி களில் ஆயிரக்கணக்கான மாண வர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயனடைந் தனர்.

இந்த நிலையில், ‘தி இந்து’ நாளிதழ், எஸ்கேஆர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ வழிகாட்டி நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள  மூங்கிலான் உடையார் திருமண மஹாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதில், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராஜேந்தி ரன், கல்வியாளர் மற்றும் தன்னம் பிக்கை பேச்சாளர் சீமான் ஆகி யோர் சிறப்புரையாற்றுகின்றனர். எஸ்கேஆர் பொறியியல் கல் லூரியின் தலைவர் கே.ராம தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங் களை எளிதாகப் படிப்பது, தேர்வுக்குத் தயாராவது, 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான நுணுக்கங்கள் குறித்து அந்தந்த பாட ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் ஃபார்முலா புத்தகம், முக்கிய வினாக்கள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து கேட், ‘சென்னை அகாடமி ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் டிசைன்’ நிறுவனம் ஆகியவை நடத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in