Published : 16 Mar 2017 12:13 PM
Last Updated : 16 Mar 2017 12:13 PM

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி (ரூ.3,14,366 கோடி) ஆக இருப்பதாக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டார்.

தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழகத்தின் நிதி நிலவரம் குறித்த அறிவிப்புகளை முதலில் வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.3 லட்சம் கோடி (ரூ.3,14,366 கோடி) என்றார். இதில் பெரும்பான்மையானயான கடன் சுமை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) மூலமாக ஏற்பட்டதாகும்.

நிதிப் பற்றாக்குறை ரூ. 41,977 கோடி என்ற அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x