

இணையம், மின் வணிகம், தொலை தூர மருத்துவம் என உலகம் ஒரு புறம் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டாலும் மற்றொரு புறம் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வியும், வழிகாட்டுதலும் எட்டாக்கனியாகவே இருப்பதால் அவர்கள் வாழ்க்கை திசைமாறுகிறது. பொரு ளாதாரத்தில் பின்தங்கிய இந்த குழந்தைகளுக்கு எழுத்தறிவு ஊட்டி, அவர்களைச் சாதனையாளர் களாக்கும் முயற்சியில் மதுரை யைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வண்டியூர்), கிருஷ்ணமூர்த்தி (திருப்பாலை) கார்த்திக் (திருப் பரங்குன்றம்), பரந்தாமன் (மதிச்சி யம்), பழனிச்சாமி (அனுப்பானடி) ஆகிய 5 இளைஞர்கள் ஈடுபட்டுள் ளனர்.
இவர்களில் பழனிச்சாமி, கார்த்திக் ஆகியோர் கல்லூரி மாணவர் கள். மற்ற மூவரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக மதுரை வைகை ஆற்றங்கரையோர குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று சாலையோரத்தைப் பள்ளிக்கூட மாக்கி, திறந்தவெளியில் கரும் பலகைகளை வைத்து கற்பித்தல் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இலவசமாக கணினி கல்வி, ஆங்கில பேச்சுத்திறன், எழுத்தறிவு கற்பிப்பது முதல் அதிக மதிப் பெண் எடுக்க பிளஸ் 2 வரை டியூச னும் இந்த குழந்தைகளுக்கு எடுக்கின்றனர். அதுமட்டுமில்லாது, தனித்திறன்களை வெளிப்படுத்த ஓவியம், நடனம், பாடல் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப் புப் பயிற்சிகளை வழங்குகின்றனர்.
சுற்றுச்சூழல், அரசியல், வர லாறு, கலாச்சாரம் மற்றும் கல்வி பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, அந்த குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த கற்பித்தல், வழிகாட்டுதல் பணியுடன் நிற்காமல் சமீபத்தில் ‘செமீன்’ பவுண்டேசன் என்ற கல்வி அமைப்பை ஏற்படுத்தி ஆதரவற்ற இல்லங்கள், இடிந்து அபாயத்தில் இருக்கும் அரசு பள் ளிக்கூடங்கள், சத்துணவு மையங் கள், அங்கன்வாடி மையங்களைச் சீரமைப்பது, படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு தேவை யான அத்தியாவசிய பொருட்களை யும் வாங்கிக் கொடுக்கின்றனர்.
இதுகுறித்து இந்த இலவச கற்பித்தல் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: நான் பிஎஸ்சி வேதி யியல் படித்துவிட்டு, தனியார் மருத் துவ கம்பெனியில் நெட்வொர்க் இன்ஜினீயராக பணிபுரிகிறேன். ஆசிரியராக வேண்டும் என்று நினைத்தேன். பொருளாதாரத் தேவையால் வேலைக்குச் சென்று விட்டதால் எனது ஆசிரியர் கனவு சிதைந்துபோனது.
என்னைப்போல் பொருளா தாரத்தில் பின்தங்கிய குடிசைப் பகுதி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் கனவுகளும் நிறை வேறாமல் மொட்டிலேயே கருகி அவர்கள் வாழ்க்கை திசைமாறு கிறது. அதனால், அவர்களுக்கு கல்வி பயிற்சியும், ஊக்கமும் அளித்து நம்பிக்கையை ஏற்படுத்தி னால் அவர்கள் கனவுகள் நிறை வேற, வாழ்க்கைத் தரம் மேம்பட உதவலாம் என்ற அடிப்படையி லேயே விடுமுறை நாட்களில் வாரந்தோறும் 500 குழந்தைகளுக்கு இந்த இலவச கற்பித்தல் பயிற்சியை அளிக்கிறோம்.
குடிசைப் பகுதி குழந்தைகள், ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு டியூசன், தனித்திறன் பயிற்சி வழங்க ஆளில்லை. பயிற்சி நிலை யங்களுக்கு செல்ல பொருளாதார வசதியும் கிடையாது. அதனால், அவர்களுக்கு இலவசமாக டியூச னும், தனித்திறன் பயிற்சியும் சொல் லிக் கொடுக்கிறோம். ஆர்வமும், வாசிப்புப் பழக்கமும் இருந்தால் சாதிக்கலாம். குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் சாத னையாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.
நாங்கள் 5 பேரும் ஒவ்வொரு துறையில் ஆர்வமும், பயிற்சியும் பெற்றவர்கள் என்பதால் குழந்தை களும் எல்லா வகையான பயிற்சி யும், கல்வி கற்பித்தல் அளிப்பதிலும் சிரமமோ, பிரச்சினையோ இல்லை. எங்களிடம் பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாததால் சாலையோரங்களிலே விடுமுறை நாட்களில் கற் பித்தல் சேவையை செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.