Published : 17 Oct 2014 10:59 AM
Last Updated : 17 Oct 2014 10:59 AM

சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு வலியுறுத்தல்

தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005-ல் மத்திய, மாநில அரசுகள் திருத்தம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட் டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலை யத்தில் இளைஞர் சையது முகமது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மோடி அரசு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பல்வேறு வகைகளில் சீர்குலைக்க முயற்சிப்பதை உடனே கைவிட வேண்டும். ஸ்பிக் மற்றும் மெட்ராஸ் உரத் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கான இயற்கை எரிவாயு கிடைக்க மத்திய அரசு வழி செய்ய வேண்டும். யூரியாவுக்கான மானியம் தொடர வேண்டும்.

நோக்கியா ஆலையை தொடர்ந்து இயங்கச் செய்ய வலியு றுத்த வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஆலையை அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும். மேலும், தொழிலாளர் நலனை பாதுகாக்கும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005-ல் மத்திய, மாநில அரசுகள் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அக்.16 (நேற்று) சென்னை புரசைவாக்கத்தில் நடத்த விருந்த ஊழல் எதிர்ப்பு பொதுக் கூட்டத்துக்கு திடீரென அனுமதி மறுத்த காவல்துறையை கண்டிப்ப துடன் இதுபோன்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x