டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல்: மது பாட்டில்களை உடைத்தெறிந்து போராட்டம்

டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல்: மது பாட்டில்களை உடைத்தெறிந்து போராட்டம்
Updated on
1 min read

அரியலூர், விழுப்புரம் மாவட்டத் தில் டாஸ்மாக் கடைகள் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள், மது பாட்டில்களை உடைத்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திடீரென கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்தனர்.

தகவலறிந்து வந்த கலால் வட் டாட்சியர் தாரகேஸ்வரி, டிஎஸ்பி மோகன்தாஸ் ஆகியோர் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, அனை வரையும் கலைந்து போகச் செய்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

திருமானூரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை தற்போது, பாளைய பாடி சாலையில் மஞ்சமேடு கிராம வயல் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மஞ்சமேடு மற் றும் காரைபாக்கம் கிராம மக்கள் அரியலூர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அகற்றப் படவில்லை.

இந்நிலையில், நேற்று அந்த டாஸ்மாக் கடை முன்பு மஞ்ச மேடு, காரைபாக்கம் கிராம பொது மக்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடையை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார் போராட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்ய மினி பஸ்ஸை எடுத்து வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் டாஸ்மாக் கடைக்கு பாது காப்பு கொடுக்கும் போலீஸார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கூறி கடையின் மீது கற்களை வீசி தாக் கினர். அப்போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், அங்கு வந்த வட்டாட் சியர் கோவிந்தராஜன், இனி இங்கு டாஸ்மாக் கடை இயங்காது என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.

உளுந்தூர்பேட்டை அருகே

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எம்.குண்ணத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் கடை முன் நேற்று திரண்ட அப்பகுதி பெண்கள், கடையை காலி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். கடையின் பூட்டை உடைத்தும், கூரையை தகர்த்தும் உள்ளே நுழைந்த பெண்கள் அங்கிருந்து மது பாட்டில்களை எடுத்து வந்து வீதியில் வீசி உடைத்தனர்.

மேலும், உளுந்தூர்பேட்டை - திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர்.

இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு பெண்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in