Published : 03 Mar 2014 09:15 AM
Last Updated : 03 Mar 2014 09:15 AM

போக்குவரத்து, கண்காணிப்பு வசதிக்கான செயற்கைகோள் விரைவில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேச்சு

போக்குவரத்து, கண்காணிப்பு சேவைகளை எளிமைப்படுத்துவதற்காக செயற்கைகோள் விரைவில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக ஆராய்ச்சி தின விழாவில் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தரைவழி, கடல்வழி போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை, வாகன கண்காணிப்பு, கைபேசியுடன் ஒருங்கிணைத்தல், மலை ஏறுபவர்களுக்கு ஏதுவான தகவல், ஓட்டுநர்களுக்கான காட்சி மற்றும் ஒலி உதவி சேவைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தரக்கூடிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். (1-பி) (Indian Regional Navigational Satellite System) என்ற செயற்கைகோள் மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு விண்ணில் செலுத்தப்படும்.

இது போன்று ஏழு செயற்கைகோள்கள் 2015-க்குள் செலுத்தப்படும். முதல் செயற்கைகோள் கடந்த ஜூலை மாதம் செலுத்தப்பட்டது. இது இரண்டாவது செயற்கைகோள். இன்னும் மூன்று செயற்கைகோள்கள் இந்த ஆண்டில் செலுத்தப்படும்.

சந்திரயான் -2 திட்டத்தில் இந்தியா தனக்கே சொந்தமான தரையிறங்கும் விண்கலத்தை தயாரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x