

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவரின் புகைப்படத்தை அவரது தந்தை தனது வாட்ஸ்அப்பில் புரொஃபைல் பிக்சராக வைத்திருந் தார். அந்த புகைப்படத்தை ஒருவர் டவுன்லோடு செய்து, அதனுடன் ஆபாசப் படங்களை இணைத்து வீடியோ தயாரித்துள்ளார். பின்னர் அதை அனைவருக்கும் பகிர்ந் துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தந்தை, இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜனிடம் புகார் அளித்தார்.
விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டது சென்னை குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உளவுப்பிரிவில் காவலராக பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு மடிச்சல் பகுதியைச் சேர்ந்த செந்தில்(34) என தெரியவந்தது.
அவரை களியக்காவிளை போலீஸார் கைது செய்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் குழித்துறை நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நீதிபதி அப்துல் சலாம் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.