

கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கியில் உள்ள கோயில் குளத்தைத் தூர் வாரும் பணியில் ஈடுபட்ட சென்னை இளைஞர்கள் 6 பேர் அனைத்துத் தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கே.கவிதா, எம்.பிரபாகரன், பி.பரத்குமார், கே.அப்துல்காதர், பார்த்தீபன் வடிவேல், பாலாஜி ராமச்சந்திரன் ஆகிய இளைஞர்கள் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தைத் தூர்வாரும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றை தங்களது சொந்த செலவிலேயே வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பணியை மேற்கொண்டனர்.
சென்னையில் ஐ.டி., மார்க்கெட்டிங் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லூரி மாணவர் என்ற நிலையில் உள்ள இந்த இளைஞர்கள் தங்களது சொந்தப் பணி, வீடு, உடைமை களை மறந்து, இருள்நீக்கி கிராமத் திலேயே தங்கி குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்டதை அறிந்த மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ்.செல்வசுரபி, வட்டாட்சியர் மலர்கொடி மற்றும் அதிகாரிகள் பணியை ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், இப்பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அப்பகுதி விவ சாயிகள், கிராம மக்கள் நன்றி தெரிவிப்பதுடன், சில உதவிகளை யும் செய்தனர்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பாலாஜி ராமச்சந்திரன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போராட் டத்தின்போதே, விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக நாங்கள் 6 பேரும் விவாதித்தோம். வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு உதவும் வகையில் தொலை நோக்குடன் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கும் வகையில் நீர்நிலை களைத் தூர்வாரிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
இதற்காக வறட்சியின் தாக்கம் அதிகம் உள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதமே நேரடியாக கள ஆய்வு செய்து, 6 கிராமங்களைத் தேர்ந் தெடுத்தோம். அவற்றில் நாங்கள் பணி செய்ய உகந்த சூழ்நிலையில் அமைந்த இந்த 3 ஏக்கர் குளத்தைத் தேர்வு செய்து, அதற்கு உரிய நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றோம்.
ரூ.73 ஆயிரம் செலவில்...
பின்னர், இருள்நீக்கியைச் சேர்ந்த இளைஞர்கள் ரவீந்திரன், ராகுல் ஆகியோர் உதவியுடன் மன்னார்குடி கோட்டாட்சியர் எஸ்.செல்வசுரபியிடம் கடிதம் கொடுத்து, குளத்தைத் தூர்வார அனுமதி பெற்றோம். அதன்படி, இந்தக் குளத்தின் மையத்தில் 60-க்கு 30 என்ற அளவில் 3 அடி ஆழத்தில் உள்குளத்தை வெட்டி னோம். வெட்டப்பட்ட மண்ணைப் பயன்படுத்திக் குளத்தின் கரையை உயர்த்தினோம்.
இதற்கு ரூ.73 ஆயிரம் செலவா னது. நாங்கள் ஏற்படுத்திய ‘oneday salary for farmers’ மற்றும் ‘Discuss about farmers’ ஆகிய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்தவர்களிடம் நிதி திரட்டி, இந்தப் பணியைத் தொடங்கினோம். தற்போது பணி நிறைவடைந்துள்ளது.
எங்களின் அடுத்தப் பணியை விடுமுறை நாட்களில் செய்யும்வகையில், குழு உறுப் பினர்களுடன் விவாதித்து திட்ட மிடுவோம் என்றார்.