

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே மாதம் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இந்த நாட்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனவிருத்தி செய்யும் என்பதால், விசைப் படகுகள் மற் றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படும்.
இதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வரும் மே 29-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக் கும். இந்த நாட்களில் ஆழ்கட லில் சென்று மீன் பிடிக்க விசைப் படகுகள், இழுவைப் படகுகளுக்கு அனுமதி கிடையாது.
மீன்பிடித் தடைக் காலம் நாளை முதல் அமலுக்கு வந்த போதிலும், தூத்துக்குடியில் நேற்று புனித வியாழன் தினத்தை முன்னிட்டும், இன்று புனித வெள்ளியை முன்னிட்டும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாளை முதல் வழக்கம் போல் 45 நாட்கள் தடைக் காலம் தொடங்கு கிறது. மீனவர்கள் தங்கள் படகு களை சீரமைத்தல், இயந்திரங் களை பராமரித்தல், வலை களை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.