தமிழகம்
தவறான சிகிச்சை: பொறியாளர் பலி?
சென்னை பழைய வண்ணாரப் பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சேர்மக்கனி. இவரது மகன் சரவணக்குமார்(32). பொறியாளரான இவர், ஸ்ரீபெரும் புதூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த் தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென சரவணக் குமார் மரணம் அடைந்தார். தவறான சிகிச்சையால் அவர் உயிர் இழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். தண்டையார்பேட்டை போலீஸில் புகாரும் கொடுத்தனர். சரவணக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சரவணக்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும்.
