ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதா?- காவல் துறைக்கு விஜயகாந்த், கி.வீரமணி கண்டனம்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதா?-  காவல் துறைக்கு விஜயகாந்த், கி.வீரமணி கண்டனம்
Updated on
1 min read

தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்றவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த்:

உச்ச நீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டு களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என மத் திய, மாநில அரசுகளைச் சார்ந்த வர்கள் உறுதி அளித்திருந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைக்காத தால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனாலும் பல இடங்களிலும் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்தும் வகையில் வீர விளை யாட்டில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

கி.வீரமணி:

தடையை மீறி னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தடியடி நடத்துவது சரியான அணுகு முறை அல்ல. இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சியாளர்கள் இதை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜல்லிக்கட்டு என்பது மிருக வதை அல்ல. மாறாக விலங்கு களை பாதுகாத்து வளர்ச்சி அடை யச் செய்யும் கொண்டாட்டம். எனவே, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in