காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ராமமோகன ராவ் மீண்டும் பதவிக்கு வந்தது எப்படி?

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ராமமோகன ராவ் மீண்டும் பதவிக்கு வந்தது எப்படி?
Updated on
2 min read

தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல்

வருமானவரி சோதனையைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவுக்கு 3 மாத காலத் துக்குள் மீண்டும் பதவி அளிக்கப் பட்டிருப்பது, அதிகாரிகள் மத்தி யில் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் ஆட்சிக்காலத்தில், முதல்வரின் செயலராக 2011 முதல் இருந்தவர் பி.ராமமோகன ராவ். 2016-ல் மீண்டும் ஜெய லலிதா முதல்வரானபோது, தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஜூன் 7-ம் தேதி மாற்றப்பட்டு, தமிழக தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் பொறுப்பேற்றார்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெய லலிதா காலமான நிலையில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரி கள் சோதனையிட்டனர். தலை மைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அறையிலும் சோதனை நடந்தது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ராமமோகன ராவ் மகனின் வீடு, நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் நீக்கப் பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதி லாக, தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ராமமோகன ராவ், ‘தமிழக அரசும், முதல்வர் ஓபிஎஸ்ஸும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல வருமானவரித் துறை சோதனை நடந்திருக்காது’ என்று தெரிவித்தார். உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரி இவ்வாறு பேசியது விதிகளின்படி தவறு என் றாலும், தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, தொடர் நடவடிக்கை கள் குறித்த தகவல்களை வருமானவரித் துறையும் வெளி யிடவில்லை.

இந்நிலையில், கடந்த 3 மாதங் களுக்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவுக்கு நேற்று முன் தினம் இரவு புதிய பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக அவர் நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் நியமனம் அரசு அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறிய தாவது:

சீனியர் ஐஏஎஸ் அதிகாரியை நீண்ட நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைப்பது சரியாக இருக்காது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, ஞான தேசிகனுக்கும் இதேபோல்தான் பதவி வழங்கப்பட்டது. தற் போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், ராமமோகன ராவுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பு ஆதரவு இல்லாமல் அவர் மீண்டும் பதவியைப் பெற்றிருக்க முடியாது. டெல்லியில் தனக்கு உள்ள பிடிப்பைப் பயன்படுத்தி அவர் மீண்டும் பதவியைப் பெற்றதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் முக்கிய பொறுப்பில் இருக்கும், மத்திய அரசுக்கு நெருக்கமான ஒருவர் மூலமாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பரவ லாக பேசப்படுகிறது. வருமான வரித் துறை சோதனை யின் பின்னணிதான் புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in