

மது போதையில் ஏற்பட்ட தகராறில் காவலாளியைக் கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). பொழிச்சலூர் லட்சுமி நகர் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் பழனி(36). இருவரும் நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவ லாளிகளாக வேலை செய் தனர். நுங்கம்பாக்கம் நெடுஞ் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டிடத்தில் இருவரும் காவலாளிகளாக நியமிக்கப் பட்டனர். நண்பர்களான இருவரும் தினமும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல ஒன்றாக மது அருந்தினர். பின்னர் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பழனி, அருகே பூ விற்கும் கடைக்குச் சென்று அங்கே இருந்த சிறிய கத்தியை எடுத்து ரமேஷின் கழுத்தில் குத்தி யதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மது போதையில் இருந்த பழனி கத்தி யுடன் அங்கேயே உறங்கிவிட்டார்.
கழுத்தில் கத்திக் குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் காவலாளி இறந்து கிடப்பதை அருகே இருப்பவர்கள் பார்த்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தியதில் பழனி தான் கொலை செய்தது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.