

உணவகங்களில் பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் உறைகள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் விதமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த இருநாட்களாக சென்னையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்களில் இட்லி வேக வைக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்தப்படுவதாகவும், சாம்பார் உள்ளிட்ட குழம்பு வகைகளைக் கொடுக்க பிளாஸ்டிக் உறைகளை பயன் படுத்துவதாகவும், சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை, பாரிமுனை ஆகிய 4 இடங்களில் இயங்கும் உணவகங்களில் நேற்றும், நேற்று முன்தினமும் சோதனையிடப்பட்டது.
மொத்தம் 94 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 37 உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் வைத்திருந்த மொத்தம் 11.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால், உணவுப் பொருட்கள் நஞ்சாவது குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.