Published : 14 Jun 2017 09:13 AM
Last Updated : 14 Jun 2017 09:13 AM

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம்: சங்கர மடத்தில் மடாதிபதிகளுடன் ஆலோசனை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து சங்கர மடத்துக்குச் சென்று காஞ்சி மடாதிபதிகளைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று மதியம் 2 மணியளவில் அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமானத் தளத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் காஞ்சியில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு மாவட்ட ஆட்சி யர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந் தோஷ் ஹைதி மணி ஆகியோர் குடியரசுத் தலைவரை வரவேற்ற னர்.

இதையடுத்து பட்டு வேட்டி, அங்கவஸ்திரத்துடன் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தவரை,  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கோயில் காரியம் சல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தைச் சுற்றி வந்தார். இதைத் தொடர்ந்து காமாட்சி அம்மனை வழிபட்டார்.

சங்கர மடத்தில் ஆலோசனை

இதையடுத்து சங்கர மடம் வந்த அவருக்கு மடத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் னர் மடாதிபதி  ஜெயேந்திர சரஸ் வதி சுவாமிகள், இளைய மடாதி பதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து அவர் ஆசி பெற்றார். அங்கு நடை பெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர், இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி னார்.

குடியரசுத் தலைவர் வரு கையையொட்டி காஞ்சிபுரத்தில் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டிருந்தது. வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, கூடுதல் செயலர் (பாதுகாப்பு) அனுஜார்ஜ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பலர் காஞ்சிபுரம் வந்திருந்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x