

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ. 80 குறைந்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. அதேபோல நேற்றும் பெரிய மாற்றம் இல்லாமல், ஒரு கிராமுக்கு ரூ. 80 மட்டும் குறைந்திருந்தது. ஒரு சவரன் நகை ரூ. 22 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 22 ஆயிரத்து 280-ஆக இருந்தது.
இதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 300 குறைந்து, ரூ. 43 ஆயிரமாக இருந்தது. நேற்று முன்தினம் ரூ. 43 ஆயிரத்து 300-க்கு ஒரு கிலோ வெள்ளி விற்பனையானது.