

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டி பிரதமரின் சமூக வலைத்தள பக்கத்தில் வலியுறுத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு நாளும் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் உருவாகி வருகிறது.
தங்கள் வாழ்நாளில் ஜல்லிக்கட்டையே பார்த்திராத வர்களும், ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களும் அதனைத் தடுக்க நினைக்கிறார்கள். தமிழ் இனத்துக்கு விரோதமாக தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு கூட்டம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தமிழக அரசியல் இயக்கங்கள் ஓரணியில் திரள வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வை பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் அவர்களின் இணையதளங்களில் நாம் தெரிவிக்க வேண்டும்.