

கும்பகோணம் அருகே சுவாமி மலைக்கு வடமேற்குப் பகுதியில் உள்ள மேலமாஞ்சேரி கிராமத்தின் வயல்வெளிப் பகுதியில் 2 சிவலிங் கங்கள் பராமரிப்பின்றி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் மேலமாஞ் சேரிக்கு நேற்று முன்தினம் சென்று வயல்வெளி பகுதியில் உள்ள சிவலிங்கத்தைப் பார்வையிட்டார்.
மேலமாஞ்சேரியில் விளைநிலங்களுக்கு மத்தியில் இரு மரங்களுக்கு நடுவே காணப்பட்ட சிவலிங்கம் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. அதேபோல, மற்றொரு சிவலிங்கம் அதே ஊர் ஏரிக்கரையில் ஆவுடையார் பாகம் உடைந்த நிலையில் இருந்தது.
இந்த 2 சிவலிங்கங்களும் பராம ரிப்பு இல்லாமல் யாரும் வழிபடாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஊர்மக்கள் சார்பில் சிறிய கோயில் அமைத்து வழிபடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவடிக்குடில் சுவாமிகள் கூறியபோது, “மேலமாஞ் சேரியில் உள்ள 2 சிவலிங்கங்களும் மிகவும் அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிவலிங்கங்கள் 800 ஆண்டுகள் பழமை யானதாக இருக்கலாம். வயல்வெளிப் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் காணப்படும் இந்த சிவலிங்கங்களை எடுத்து, அதே பகுதியில் சிறிய அளவில் கோயில் அமைத்து ஊர் மக்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் குறித்து மேலும் விரிவான ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முன் வர வேண்டும்” என்றார்.