

தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் திலகர் திடலில் இன்று (ஜூன் 28) மாலை தர்மயுத்த இணைப்பு விழா என்ற பெயரில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், 15 மாவட்டங்களில் உள்ள மூவேந் தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைய உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதற்காக தஞ்சாவூர் நகரம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு மர்ம நபர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை கிழித்து சாலைகளில் வீசினர். இதைப் பார்த்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர், தஞ்சாவூர் ரயிலடியில் ஒன்றுதிரண்டு, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களே பேனர்களை கிழித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
எஸ்பியிடம் மனு
நகர டிஎஸ்பி தமிழ்ச்செல்வன், ‘தஞ்சாவூர் நகரம் முழுவதும் பேனர்கள் வைக்க அனுமதி பெற வில்லை. பேனர்களை கிழித்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதையடுத்து, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பேனர்களை கிழித்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளிக்கப் பட்டது.